மார்த்தாண்டம், மார்- 20
மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியை சேர்ந்தவர் கோபன் (42). கொத்தனார். விளாத்தி விளை பகுதியை சேர்ந்தவர் தேவானந்த் (31). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். கோபானுக்கும், தேவானந்துக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்தது.
நேற்று இரவில் கோபன் கோவிலுக்கு நடந்து செல்லும் போது அவரை காரில் வந்த ஒரு கும்பல் வழிமறித்தது. யார் என பார்த்த போது காரில் இருந்து தேவானந்த் அதே பகுதியை சேர்ந்த விஜி மோன், ஜோஸ்லின் பினு ஆகியோர் வேகமாக இறங்கி வந்த மூன்று பேர் கும்பல் கோபனை விரட்டி சென்று அடித்து சரமரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து மார்த்தாண்டம் போலீசில் கோபன் புகார் செய்தார். போலீசார் தேவானந்த், விஜிமோன், ஜோஸ்லின் பினு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.