திண்டுக்கல்லில்
324 – B லயன்ஸ் மாவட்டத்தின் 35 – வது மாவட்ட மாநாடு குறித்து
ஆலோசனைக் கூட்டம் .
324 – B லயன்ஸ் மாவட்டத்தின் 35 – வது மாவட்ட மாநாடு வருகின்ற மார்ச் 29, 30 தேதிகளில் AKNK மஹால் பொய்கைபட்டியில் சிறப்பாக நடைபெற உள்ளது. அதற்கான முன் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் PVK ஹோட்டலில் நடைபெற்றது. மாவட்ட மாநாட்டின் நடத்துநர் குழு தலைவர் Ln. மோதிலால் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்கள். அமைச்சரவை இணைச் செயலாளர் Ln.அருண்குமார், ஒருங்கிணைப்பாளர் ஆடிட்டர் Ln.CA.SS.ரவீந்திரன், மண்டல தலைவர் Ln.S. நசுருதீன் அமைச்சரவை பதவியேற்பு நடத்துநர் குழு தலைவர் Ln.ஸ்டாலின் ஆரோக்கியராஜ் வட்டார தலைவர் Ln.R. ஹரிஷ் வர்த்தன விக்னேஷ், நாட்டாண்மை Ln.Dr.N.M.B.காஜா மைதீன் ஆகியோர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர். இதில் திண்டுக்கல், வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த அனைத்து சங்கங்களின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.