வெள்ளானூர்
அருள்மிகு ஸ்ரீ லஷ்மிபத்மாவதி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில்
மகா கும்பாபிஷேக விழா
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், வெள்ளானூர் மதுரா கொள்ளுமேடு கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ லஷ்மிபத்மாவதி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
அருள்மிகு ஸ்ரீ லஷ்மிபத்மாவதி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைஷ்ணவ சாஸ்திர முறைப்படி பாலாலயம் செய்வித்து, புதிதாய் திருக்கோவில் விமானம் மற்றும் துஜஸ்தம்பம், புதிய சிற்பங்கள் பரிவார விமானங்கள் அமைத்து, சித்திர கலாபவணம், வர்ணபாபணம் செய்வித்து, விமானம், துஜஸ்தம்பம், பரிவார விமானங்கள், மூலவ மூர்த்திகளுக்கும், உற்சவமூர்த்திகள், பரிவார மூர்த்திகளுக்கும் நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகமும் அதனைத் தொடர்ந்து, உற்சவ திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.
கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் திமுக பகுதி செயலாளர் அழகுராஜா தலைமையில் சிற்றுண்டி உணவு வழங்கப்பட்டது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை
ஆலய நிர்வாகி சீனிவாசன். மற்றும் விழாக் குழுவினர்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.