தஞ்சாவூர் மார்ச்.13.
தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் – 1 தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் 13ஆம் தேதி தொடங்குகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது
தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப் பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்தில் இயங்கிவரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிற து .இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்று பயனடைந்து வருகின்ற னர் .தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு இந்த அலுவலக தன்னார்வ பயிலும் வட்ட பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்று குரூப் 4 தேர்வில் 14 மாணவர்களும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட போலீஸ் தேர்வில் 3 பேரும் வெற்றி பெற்று அரசு பணி வாய்ப்பு பெற்றுள்ளனர்.
குரூப் – 1 தேர்வு ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இந்த தேர்விற்கு தயாராகி வரும் போட்டி தேர்வாளர் கள் பயன்பெறும் வகையில், இலவச பயிற்சி வகுப்பு தஞ்சாவூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத் தில் வருகிற 13-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
இப் பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வார நாட்க ளில் பிற்பகல் 2:30 முதல் மாலை 4:30 மணி வரை நடைபெறும். பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர் 2 பாஸ்போர்ட் புகைப் படம் ,ஆதார் அட்டை நகல், ஆகிய வற்றுடன் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04362237037என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது