கன்னியாகுமரி மார்ச் 9
மத்திய பா.ஜ.,அரசை கண்டித்து திமுக இளைஞர் அணி சார்பில் கன்னியாகுமரியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அகஸ்தீஸ்வரம் தெற்கு திமுக செயலாளர் பாபு பேசினார்.
சிறப்பு விருந்தினராக தலைமை கழக ஊடகவியலாளர் செந்திவேல் கண்டன உரையாற்றினார்.மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ், சாமிதோப்பு தலைமைபதி குரு வக்கீல் பால ஜனாதிபதி, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அகஸ்தீசன் , தலைமை செயற்குழு உறுப்பினர் பார்த்தசாரதி , அரிகிருஷ்ண பெருமாள் உட்பட பலர் கண்டன உரையாற்றினார்.
பேரூர் செயலாளர்கள் குமரி ஸ்டீபன், வைகுண்ட பெருமாள், பூவியூர் காமராஜ், பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் தமிழன் ஜானி உட்பட பலர் பங்கேற்றனர்.கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற செந்தில்வேலை கவுன்சிலர் பிரேம் ஆனந்த் வரவேற்றார்.