ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில் இயக்கம்.
சுற்றுலா மலை மாவட்டமான நீலகிரிக்கு சுற்றுலா வாசிகளின் எண்ணிக்கை அதிகரிப்பையடுத்து மார்ச் 28 முதல் ஜூலை 6 வரை வெள்ளி மற்றும் ஞாயிறு கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மறு மார்க்கமாக மார்ச் 29 முதல் ஜூலை 7 வரை சனி மற்றும் திங்கட்கிழமைகளில் ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.