கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், பாத்தக்கோட்டா கிராமத்தில் குழந்தைகள் மையம், காமன்தொட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாய விலைக்கடை, அட்டக்குறிக்கி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் .. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரிமாவட்ட ஆட்சித்தலைவர்.ச. தினேஷ்குமார் அவர்கள், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், பீர்ஜேப்பள்ளி ஊராட்சி, பாத்தக்கோட்டா கிராமத்தில் குழந்தைகள் மையத்தை பார்வையிட்டு, குழந்தைகளின் வருகை பதிவேடு, எடை, உயரம், குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவு மாதிரிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், குழந்தைகள் மையம் மற்றும் கழிப்பறை ஆகியவற்றை தூய்மையாக பராமரிக்க அங்கன்வாடி பணியாளருக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, காமன்தொட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாய விலைக்கடையில் அரிசி, பருப்பு, சக்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் இருப்பு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, கானலட்டி ஊராட்சி, அட்டக்குறிக்கி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு வழங்கப்பட்ட மாதிரி உணவை சாப்பிட்டு ஆய்வு செய்தார். மேலும், 2 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் ஆங்கிலம் வாசிப்பு திறன், தமிழ் பாடத்திட்டம் வாசிப்பு திறன், திருக்குறள் ஒப்புவிப்பு மற்றும் தூய்மை பணிகள் குறித்து மாணவர்களின் விழிப்புணர்வு பாடல்களை கேட்டறிந்தார். மேலும், மாணவ, மாணவியர்கள் நல்ல முறையில் கல்வி கற்று, உயர்ந்த பொறுப்பிற்கு வரவேண்டும் என மாணவர்களிடம கலந்துரையாடினார்.
தொடர்ந்து, அட்டக்குறிக்கி கிராமத்தில், தோட்டக்கலை துறை சார்பாக நுண்ணுயிர் பாசனம் பிரிவின் கீழ், விவசாயி.லகுமையா அவருடைய விவசாய நிலத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து புதினா சாகுபடி செய்யப்பட்டுள்ளதையும், பயிர் செலவினங்கள், விற்பனை செய்வது குறித்து விவசாயிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வுகளின்போது, ஓசூர் சார் ஆட்சியர் .பிரியங்கா ., இணை இயக்குநர்கள் .பச்சையப்பன் (வேளாண்மை), .இந்திரா (தோட்டக்கலைத்துறை), வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ராஜேஷ், வட்டாட்சியர் .மோகன்தாஸ், வருவாய் ஆய்வாளர் .ரத்தினகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.