ஈரோடு மார்ச் 1
தமிழ் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பேர் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தங்கி இருந்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகிறார்கள்.
இவர்கள் வார விடுமுறை நாட்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.
இவ்வாறு சொந்த ஊர்களுக்கு செல்லும் போது போதிய பஸ் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இரவு நேரங்களில் பஸ் நிலையத்தில் ஆண்களும் பெண்களும் அதிக நேரம் காத்து இருப்பதுடன் தாங்கள் செல்லும் ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் வந்தால் முண்டியடித்து கொண்டு ஏறும் அவல நிலை ஏற்படுகிறது.
இதை தவிர்க்க கூடுதல் பஸ் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதை தொடர்ந்து வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஈரோட்டில் இருந்து 50 விஷேச பஸ்கள் விடப்படும் என்று ஈரோடு மண்டல போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து
ஈரோடு மண்டல அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது
வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பயணிகளின் வசதிக்காக ஈரோட்டிலிருந்து கோவை, திருச்சி, மதுரை, சென்னை, திருச்செந்தூர், இராமேஸ்வரம், நாகர்கோயில், திருவண்ணாமலை மற்றும் பழனி போன்ற ஊர்களுக்கு தற்போது இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.