தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போக்சோ( பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012) மற்றும் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து
குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின்,கீழ் குழந்தைகளுக்கு எதிரான, குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள் குறித்து அளிக்கப்பட்ட புகார்களின் நிலைத்தன்மையை மதிப்பீட்டாய்வு செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான, குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள் நடைபெற வண்ணம் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இது குறித்து பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். பின்னர் கூட்டரங்கில் உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடந்தது. மேலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்- மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் மற்றும் கண்காணிப்பு, போதைப்பொருள் ஒழிப்பு கண்காணிப்பு குழு கூட்டம், ஆக்கிரமிப்புகள் அகற்றம் மற்றும் பொது இடங்களில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை உயர்நீதிமன்ற ஆணைப்படி அகற்றுதல் குறித்தும், தமிழ்நாடு பைபர் நெட் கார்ப்பரேஷன் நிறுவனம் பாரத் நெட் இரண்டாம் திட்டத்தை தருமபுரி மாவட்டத்தில் செயல்படுத்துவது குறித்தும் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.