சுசீந்திரம் அருகே தேங்காய் எடுக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பரிதாப சாவு
சுசீந்திரம் அருகே உள்ள ஆண்டார்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் பச்சைமால் வயது 63, கூலி தொழிலாளி. இவருக்கு இடது கை ஊனம் ஆகும். இவர் தினமும் அதிகாலையில் அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் கீழே விழுந்து கிடக்கும் தேங்காய்களை எடுக்க செல்வது வழக்கம். அதுபோல் நேற்று அதிகாலை 4 மணி அளவில் வீட்டில் இருந்து தேங்காய் எடுக்க செல்வதாக கூறி சென்றதாகவும், பின்பு சுமார் 4 .45 மணியளவில் அவரது ஊரை சேர்ந்த மனோஜ் என்பவர் வீட்டிற்கு வந்து அருகிலுள்ள இருதய ராஜா என்பவரது தென்னந்தோப்பில் உள்ள கிணற்றில் பச்சைமால் தவறி கீழே விழுந்து விட்டதாகவும், மனோஜ் தூக்க முயற்சித்த போது தூக்க முடியவில்லை எனவும், தெரிவித்தவுடன் பச்சைமாலின் மகன் அபிமோனிஷ் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது கிணற்றில் பச்சைமாலை காணவில்லை என்றும், உடனே இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்து அவர்கள் வந்து பச்சைமால் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் பச்சைமாலின் மகன் அபிமோனிஷ் இதுகுறித்து சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதம் அலி, சப்-இன்ஸ்பெக்டர் அனுஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.