வேலூர் 21
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் ரிவியரா 2025 எனும் நான்கு நாட்கள் சர்வதேச விளையாட்டு மற்றும் கலாச்சார விழா உற்சாகத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
விழாவின் தொடக்கமாக தலைமை விருந்தினர் இந்திய கூடைப்பந்து அணியின் முன்னாள் தலைவி, பத்மஸ்ரீ. அனிதா பால்துரை கொடியேற்றி வைத்தும், புறாக்களை பறக்கவிட்டும் விழாவை தொடங்கிவைத்தர்.
விஐடி தொடங்கி கரிகிரி மருத்துவமனை சந்திப்பு மீண்டும் தொடங்கிய இடம் வரையிலான 9.9 கி.மீ தூரத்தில் மாரத்தான் ஓட்டத்தை சிறப்பு விருந்தினருடன், துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.
“உடல்நலத்திற்காக ஓடுதல்” எனும் கருத்துடன் நடைபெற்ற இப்போட்டியில் மூண்றாயிரத்திற்கும் மேறபட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று ஓடினர்.
துணை வேந்தர் காஞ்சனா பாஸ்கர், விழா ஒருங்கிணைப்பாளர் கோகுல் குமார் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
முதல் நாளில் தமிழி, கலா, கோ கார்டிங் போன்ற நிகழ்வுகள் வரிசையாக உள்ளன, மேலும் மாலையில் பிரபல இந்திய திரைப்பட பின்னணிப் பாடகி, ஸ்ரேயா கோசல் மற்றும் டி.ஜே. பரோமா ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
பல குழுக்களின் நிகழ்வுகள், மேடை நிகழ்ச்சிகள், உணவு ஸ்டால்கள் மற்றும் கண்காட்சிகளுடன், ரிவியரா’25 இளம் திறமைகள் மற்றும் ஆற்றலின் உருகும் பாத்திரமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது.



