வேலூர்=19
வேலூர் மாவட்டம் காட்பாடி ஆக்சீலியம் தனியார் பெண்கள் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்று முடிந்து முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அக்சீலியம் கல்லூரி மாணவிகள் 900க்கு மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். 100 பேர் தேர்வு செய்யப்பட்டு பணியில் சேர்வதற்கான பணி ஆணையை கல்லூரியின் முதல்வர் ஆரோக்ய ஜெயசீலி மாணவிகளுக்கு வழங்கி வாழ்த்துரையாற்றினார் பெற்றோர்களின் எதிர்பார்ப்பை இந்த பணி ஆணையை பெற்றதின் மூலம் நிறைவேற்ற வேண்டியது ஒவ்வொரு மாணவிகளின் கடமை என்று வாழ்த்தி பேசினார். இந்நிகழ்ச்சியில் மாணவிகள் மற்றும் கல்லூரிப் பேராசியர்கள் கலந்து கொண்டனர்