ரியாத், பிப்.18-
ரியாத் மத்திய மண்டல நசீம் ரவ்தா கிளை சூறாவளி சுற்றுப்பயணம்
ரியாத் மண்டல இந்தியன் வெல்ஃபேர் ஃபோரம் நசீம் ரவுதா கிளையின் சார்பாக14-2-2025 வெள்ளிக்கிழமை அன்று மண்டல துணைச் செயலாளரும் கிளையின் பொறுப்பாளருமான ஆஷிக் இக்பால் இல்லத்தில் வைத்து கிளை தலைவர் லால்குடி ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்க மண்டல தலைமை நிர்வாகிகள் முன்னிலை வகிக்க கிளை துணைச் செயலாளர் மௌலவி முஹம்மத் யூசுப் மன்பஈ இறை வசனம் மற்றும் இறை போதனை வழங்க இனிதே துவங்கியது.
இந்தக் கூட்டத்தில் கிளை செயலாளர் திருச்சி பொறியாளர் சௌகத் வரவேற்புரையாற்றினார்.
அதனை தொடர்ந்து மண்டல துணைச் செயலாளர் ஆஷிக் இக்பால் கூட்டத்தின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தொடர்ந்து மண்டல இணை செயலாளர் திருக்கோவிலூர் ஷாக்கீர் பைக் மண்டல செயல்பாடுகளும் அதனால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து மண்டல தலைவர் மீமிசல் நூர் முஹம்மத் நம் ஓர் அணியில் திரள வேண்டியதன் அவசியம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து மண்டல செயலாளர் நல்லூர் ரஹ்மத்துல்லாஹ் கிளை ஆய்வு செய்ததுடன் இக்கூட்டத்தை சிறப்பான முறையில் தொகுத்து வழங்கினார். கிளையின் வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக திருச்சி ரபீக் துணைச் செயலாளராக நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டது.
கிளை செயலாளர் திருக்கோவிலூர் பசுலுதீன் நன்றி கூறினார்.