ஊட்டி. பிப். 17.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் புதிய எரிவாயு மயானத்தை எம் ஆர் சி கமாண்டன்ட் கிருஷ்ணேந்துதாஸ் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். குளிர் மற்றும் வன மாவட்டமான நீலகிரியில் இறந்த பிரேதங்களை அடக்கம் செய்வதில் பல சிரமங்கள் ஏற்பட்ட நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று ஊட்டி அல்லது குன்னூரில் மின் மயானம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கையின்படி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் ரோட்டரி சங்கம் சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் குன்னூரில் எம் ஆர் சி ராணுவ முகாம் பகுதியில் எரிவாயு மயானம் அமைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை பராமரிப்பின்றி சேதம் அடைந்த எரிவாயு மயானம் மூடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் 30 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. புகை செல்லும் சிமிலிகள் உயர்த்தப்பட்டு பகுதி முழுவதும் சீரமைப்பு பணிகள் ஏற்படுத்தி தற்சமயம் குன்னூர் எம் ஆர் சி ராணுவ பிரிகேடியர் கிருஷ்ணேந்துதாஸ் மூலம் திறக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக கண்டோன்ட்மென்ட் வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி வினித், லோட்டே சிறப்பு ரோட்டரி கிளப் தலைவர் சுனில் கோயல், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கிரீஸ், ராணுவ பயிற்சி முன்னாள் ஓய்வு பெற்ற அதிகாரி கட்யோக் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனால் குன்னூர், கோத்தகிரி , ஊட்டி பகுதி மக்கள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.