சென்னை குன்றத்தூர் ஒன்றியம் கோவூர் ஊராட்சியில் அருள்மிகு சுந்தரேஸ்வரர் கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா
சென்னை
தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். ஆகியோர் நல்லாசியுடன் சிறு குரு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தாமோ. அன்பரசன் தலைமையில் திருக்குடா நன்னீராட்டு விழா நடைபெற்றது.
திருவிழாவில் சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓதி கோபுர கலசத்தில் புனித நீரால் அபிஷேகம் செய்த பின்னர் பொதுமக்களுக்கும் புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்றத் தலைவர் பா.சுதாகர் ஏற்பாட்டில் வருகை புரிந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கோவில் அறங்காவலர் க.அனந்தபத்மநாபன்
செயல் அலுவலர் ச.சீனிவாசன் கவுன்சிலர் அன்பழகன், உட்பட ஊராட்சி மன்ற தலைவர்கள் ஐயப்பன் தாங்கல் ஜமீலா பாண்டுரங்கன், இரண்டாம் கட்டளை சாந்தாதேவி சுகுமார் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.