திண்டுக்கல்லில் உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு முனைவர் Rtn.பாவலர் ஆ.சுசீலாமேரி அவர்களுக்கு சிறந்த சமூக செயல்பாட்டாளர் விருது. திண்டுக்கல்லில் உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு தரணி குழுமம் தாய்கூடு பவுண்டேஷன் மற்றும் திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் இணைந்து சாதனைகள் புரிந்த பெண்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள சுவாகத் ஹோட்டலில் நடைபெற்றது .தாய்கூடு நிறுவனம் சார்பாக தனித்திறமையும், சாதனையையும், சேவையையும், பாராட்டி 2025 -ஆம் ஆண்டிற்கான வீர மங்கை தாய்கூடு விருது வழங்கும் நிகழ்ச்சியில் முனைவர் Rtn.பாவலர் ஆ.சுசீலாமேரி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து , பதக்கம் வழங்கி சிறந்த சமூக செயல்பாட்டாளர் விருதினை திண்டுக்கல் மாநகர முதல் பெண் மேயர் J.இளமதி, தொழிலதிபர் ஜெகதீஸ்வரி, தாய் கூடு பவுண்டேஷன் நிறுவனர் Ln.Dr.S.குணவதி ஆகியோர் இணைந்து வழங்கினார்கள்.



