சென்னை,பிப்-06,
மலபார் கோல்டன் & டைமண்ட்ஸின் தாய் நிறுவனமான மலபார் குழுமம் சார்பாக 2024-25 ஆண்டிற்கான கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியை சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு துவக்கி வைத்தார் .
மலபார் குழுமத்தின் சேர்மன் எம்.பி . முகமது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மலபார் கோல்ட்& டைமண்ட்ஸின் இந்திய ஆபரேஷன்ஸ் நிர்வாக இயக்குனர் அஷர், தமிழ்நாடு மண்டல இயக்குனர் யாசர் , வடக்கு மண்டல தலைவர் அமீர்பாபு, மேற்கு மண்டல தலைவர் நெளஷத் கிழக்கு மண்டலத் தலைவர் சுதீர் முகமது மற்றும் மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ் நிர்வாக குழு உறுப்பினர்கள், பணியாளர்கள் , வாடிக்கையாளர்கள் , மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்த முயற்சி குறித்து மலபார் குழுமத்தின் சேர்மேன் எம்.பி.அகமது பேசுகையில், “கல்வி என்பது உலகை மாற்றுவதற்கான மிகவும் சக்தி வாய்ந்த கருவியாகும். கல்வி, வாய்ப்பு கதவுகளை திறக்கிறது மற்றும் வாழ்க்கையை மாற்றுகிறது .
மலபார் குழுமத்தின் ஆழமான நம்பிக்கையின் நேரடிப் பிரதிபலிப்பே எங்களுடைய கல்வி உதவித்தொகைத் திட்டம். கல்வியைப் பெறுவதில் இளம் பெண்களுக்கான தடைகளை நீக்குவதற்கு நாங்கள் உறுதி பூண்டுள்ளோம், இதன் மூலம் அவர்கள் தங்களுடைய கல்விக் கனவுகளை நனவாக்கி, சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க முடியும்.
இந்த ஆண்டு, இந்தியாவில் கல்வி உதவித்தொகை திட்டத்தின் மூலமாக 21,000-க்கும் மேற்பட்ட மாணவிகளின் கல்வியை ஊக்குவிப்பதற்காக ரூ.6 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 446 அரசு பள்ளியில் பயிலும் 3,511-க்கும் மேற்பட்ட மாணவிகளின் கல்வி
உதவித்தொகையாக மொத்தம் ரூ.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுவரையில்தமிழகத்தில் 21,500-க்கும் மேற்பட்ட மாணவிகளின் கல்விக்காக ரூ13.50 கோடிக்கு மேல் பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது. எதிர்கால சந்ததியினர் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு தயாராகும் விதத்தில் பெண் கல்வியில் கவனம் செலுத்துவதன் மூலம், மலபார் குழுமம் தனிநபர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.