சங்கரன்கோவில். மே.18
தென்காசி நெடுஞ்சாலைதுறை கட்டுமானம் (ம) பராமரிப்பு துறை சங்கரன்கோவில் கோட்டத்திற்கு உட்பட்ட சாலைகளில் பல்வேறு சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலைப் பணிகளை வருடாந்திர உள்தணிக்கை ஆய்வு நெடுஞ்சாலைத் துறையின் மற்ற அலகு அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்காண (2023-24) உள் தணிக்கை. ஆய்வானது தேசிய நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் சாந்தி தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. மேற்படி ஆய்வில் சாலையின் தரம், சாலைப் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து மேம்பாட்டு பணிகளும் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் போது தேசிய நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் புகழேந்தி, தென்காசி (க) மற்றும் (ப)கோட்டப் பொறியாளர் ராஜசேகர், சங்கரன்கோவில் க& ப உதவிக் கோட்டப் பொறியாளர் உலகம்மாள், தென்காசி (தேசிய நெடுஞ்சாலை) உதவிக் கோட்டப் பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் உதவிப் பொறியாளர்கள் உடனிருந்தனர்.
சங்கரன்கோவிலில் நடைபெறும் சாலை பணிகளை தேசிய நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர சாந்தி தலைமையில் ஆய்வு

Leave a comment