சிவகங்கை:பிப்:01
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான விவசாயிகளின் குறைந்திருக்கும் கூட்டம் நடைபெற்றது . மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் தலைமை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் எழுந்து தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள் .
அப்போது இளையான்குடி பகுதியைச் சேர்ந்த அய்யாசாமி என்ற விவசாயி பேசும் போது.இந்த விவசாயிகள் கூட்டத்தில் ஒரே மாதிரியான பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கேட்டு திரும்பத் ,திரும்ப நாங்கள் மனு கொடுக்கின்றோம்
எனவே பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் . மனுக்கள் ரிப்பீட் ஆகாத அளவுக்கு ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் . அதற்கு ஆட்சியர் இதை கவனத்தில் எடுத்து அதிகாரிகள் மூலம் துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறேன் என்றார் . தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சிவகங்கை மாவட்ட குழு உறுப்பினர் வீரபாண்டி பேசும்போது.ஜோதி என்னும் மட்டை ரக நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் . இதனைத் தொடர்ந்து விவசாயிகள் முத்துக்கருப்பன் , ராதாகிருஷ்ணன் , போஸ் , முத்துராமலிங்கம் , உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் தங்கள் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை சரி செய்தல் , கண்மாய் மற்றும் மடை மராமத்துகளை செய்து தரக் கோருதல் , கூடுதல் பஸ் வசதி கேட்டல் போன்ற கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசினார்கள் .
அதற்கு ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார் . கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி , மற்றும் விவசாயத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.