பூதப்பாண்டி – ஜனவரி -28- பூதப்பாண்டியை அடுத்துள்ள கேசவன் புதுர் அருகேயுள்ள ஒரு பள்ளியின் அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் போலீஸ் எஸ்.ஐ.லட்சுமணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் வந்து பார்க்கும் போது அந்த பள்ளி அருகேயுள்ள ஒரு தென்னந்தோப்பில் நான்கு பேர் சந்தேகத்திற்க்கு இடமாக நிற்பது தெரிந்தது உடனே போலீசார் அவர்களை பிடித்து விசாரிக்கும் போது அவர்கள் கீழ கேசவன்புதூர் பகுதியை சேர்ந்த பெர்னிட் எடிசன் (23) அதே பகுதியை சேர்ந்த மணிஷ் (21) பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த இஸ்ரவேல் (21) மற்றும் மேலப்புதூர் பகுதியை சேர்ந்த ஷகின் (29) என்றும் அவர்களிடம் 250 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது உடனே போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்
கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நான்கு பேர் கைது
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics