ஈரோடு ஜன 28
மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்
.
அப்போது அவர் கூறியதாவது தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா போன்ற மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் கடந்த சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் இந்தியா கூட்டணியை வாக்காளர்கள் வெற்றிபெற வைத்தனர். அதேபோல ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலிலும் திமுக வேட்பாளரை வாக்காளர்கள் வெற்றி பெற வைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது .
இந்தியாவின் சமூக நீதிக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக பெரியார் திகழ்ந்தார் தமிழ் நாடு பல்வேறு துறைகளில் முன்னணி மாநிலமாக திகழ்வதற்கு காரணம் கல்வி வளர்ச்சி தான். இந்த கல்வி வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தது திராவிட இயக்கமும் பெரியாரும் தான். சமுதாய வளர்ச்சி சமூக நீதி மற்றும் பெண் உரிமைக்கு பாடுபட்ட பெரியாரை புண்படுத்தியவர்களுக்கு அவர் பிறந்த மண்ணில் ஈரோடு மண்ணில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் .தமிழ்நாட்டையும் திராவிட இயக்கத்தையும் இயக்குவது பெரியார் தான் . அவர் குறித்து சீமான் தெரிவித்த கருத்துக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. அதிமுக உள்பட அனைத்து கட்சியினரும் இந்தியா கூட்டணி வேட்பாளரை பொது வேட்பாளராக கருதி வெற்றி பெற வைக்க வேண்டும். வேங்கைவயல் சம்பவத்தில் 3 பேர் மீது சென்னை ஐகோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர் தகுந்த ஆதாரத்துடன் தான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சி,பி.சி. ஐ.டி மீதும் ஐகோர்ட்டு மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.
இதன்பிறகு ஈரோடு கிழக்கு தொகுதி இடை த்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வி சி சந்திரகுமாரை ஆதரித்து அமைச்சர் முத்து சாமி மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம் பி ஆகியோர் பிரசாரம் செய்தனர். வேட்பாளர் சந்திரகுமாருடன் சென்ற அவர்கள் கருங்கல் பாளையத்தில் பல் வேறு பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்.