நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஒரசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் தலைமையில் தேசிய வாக்காளர் நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இதில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் .மகேஷ் முன்னிலை வகித்து உறுதிமொழி வாசித்தார்.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜ்குமார் , மாவட்ட கலைத்திருவிழா ஒருங்கிணைப்பாளர் ஹேரி உத்தம் சிங், மேலாண்மை குழு உறுப்பினர் லால்ஜி சிவகுமார், ஆசிரியை கமலா, கணினி ஆசிரியை நளினி பெற்றோர், மாணவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.