ஜன:26
கலைநிகழ்ச்சியுடன் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு!!
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம்மற்றும் போக்குவரத்து காவல் துறையுடன் இணைந்து புஷ்பா தியேட்டர் அருகில் உள்ள தேவங்கபுரம் அரசு பள்ளி முன்பு வித்தியாசமான முறையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில்
ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உடன் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் குருசாமி செல்லப்பாண்டி போக்குவரத்து ஆய்வாளர். அவர் பேசுகையில், அனைவரும் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும், தலைக்கவசம் நமது உயிர் கவசம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சாலையில் அதிவேகமாக பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும், இளைஞர்கள் சாலையில் சாகசங்களில் ஈடுபடக்கூடாது. மேலும் குழந்தைகளை ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் இயக்க பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது என்று கூறினார். பிறகு மாணவ செயலர்கள் மதுகார்த்திக், கிருஷ்ணமூர்த்தி, செர்லின், நவீன்குமார், பிரவீன், தாமோதரன், ஹேமந்த் ராகுல் ஆகியோர் தலைமையில் மாணவ மாணவிகள் சாலையில் தலைக்கவசம் அணியாமல் சென்று விபத்து ஏற்பட்டது போல தத்ரூபமாக நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் எமன் போல வேடம் அணிந்தும், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரம் கொடுத்தும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். நிகழ்விற்கான ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.