ஆரல்வாய்மொழி, ஜன.16:
ஆரல்வாய்மொழி நான்கு வழிச்சாலையில் தன்னைத் தானே தீ வைத்துக் கொண்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி காலமானார்
திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பெருங்குடி, காந்திநகர் பகுதியை சார்ந்த கோபால் என்பவர் மகன் சுடர்மணி – 24 இவருக்கு அடிக்கடி குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது இந்நிலையில் தனக்கு வாழ பிடிக்கவில்லை என தனது தாயிடம் அடிக்கடி கூறியதாகவும் கூறப்படுகிறது இதனுடைய கடந்த 12 ஆம் தேதி மாலை 5.15 மணி அளவில் காவல் கிணறு நாகர்கோவில் நான்கு வழிச்சாலையில் அன்னத்துகுளம் அருகே சுடர்மணி தன்னை தானே தீ வைத்துக் கொண்டார். தீயின் தாக்கத்தை பொறுக்க முடியாத சுடர்மணி நான்கு வழிச்சாலையில் அங்கு இங்குமாக ஓட தொடங்கினார். அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தினால் அவரது உடலில் தீயானது வேகமாக பற்றி எரிய தொடங்கியது இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே தீயை அணைத்தவுடன் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது பற்றி அவரது தாயார் ராணி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆரல்வாய்மொழி போலீசார் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன் எதற்காக தன்னைத்தானே தீ வைத்துக் கொண்டார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.