புதுக்கடை, ஜன- 10
புதுக்கடை அருகேயுள்ள கிள்ளியூர் பகுதி வெட்டு விளையை சேர்ந்தவர் பத்மநாபன் (62). இவர் குமரி ஐ எஸ் ஆர் ஓ. அலுவலகத்தில் செக்யூரிட்டியாக உள்ளார். இவருக்கு வேங்கோடு பகுதி குற்றிங்க விளை பகுதியில் வாழைத்தோட்டம் உள்ளது. நேற்று மாலை தோட்டத்தை பார்வையிட சென்ற போது அதே பகுதியை சேர்ந்த தோமஸ் மகன்கள் அனிஷ், அனு, வினு ஆகியோர் பத்மநாபனை அந்த வழியாக செல்லக் கூடாது என தடுத்து, வெட்டி காயப்படுத்தி உள்ளனர். காயமடைந்த பத்மநாபன் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் அனிஷ், அனு, வினு ஆகிய 3 பேர் மீது புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.