மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில், மறையூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியின் 13ம் ஆண்டு விளையாட்டு தினம் நடைபெற்றது. அப்போது விளையாட்டு போட்டிகளை மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் காவல் கண்கானிப்பாளர் ஜெயக்குமார் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார்.அப்போது.மாணவர் மாணவிகளுக்கு ஒட்ட பந்தய போட்டிகள் நடைபெற்றது.போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் 1000 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகளும்,பள்ளி இயக்குனர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.முடிவில் பள்ளியின் தலைவர் மோகன்ராஜ் நன்றி உரை ஆற்றினார். இதில் பள்ளியின் துணைத் தலைவர் சட்டநாதன், பள்ளியின் செயலாளர் ராமதுரை, பள்ளியின் பொருளாளர் செந்தில்குமார், மற்றும் பள்ளியின் இயக்குனர்கள் மீனா மோகன்ராஜ், வீராசாமி, சந்திரசேகரன், பாலாஜி, சிவலிங்கம், விக்னேஸ்வரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



