சென்னை, ஜன.08,
சென்னை
மயிலாப்பூர் பாரதீய வித்யா பவனில் தாரக மந்திர வர்ணமாலிகா டிரஸ்ட் சார்பாக ருக்மணிசிவக்குமார் எழுதிய ராக களஞ்சியம் புத்தகம் வெளியிட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் இசையமைப்பாளரும் பாஜக மாநில மற்றும் அயலக தமிழ் வளர்ச்சி தலைவர் கலைமா
மணி தீனா,
திரைப்பட பாடகர் சங்கீத வித்வான் டி.எல் மகாராஜன், பாரதீய வித்யாபவன் சென்னை கேந்திரா இயக்குனர் கலைமாமணி கே.என். ராமசாமி, இசையமைப்பாளர் லிடியன், அருள்மதி இ.ஆ.ப.வாய்ஸ் கல்ச்சர் ஸ்டூடியோ நிறுவனரும் இசையமைப்பாளருமான வசந்த், இசை மேதை கல்யாணி மற்றும் கர்நாடக இசை வித்வான்கள், கலைஞர்கள், அறிஞர்கள் கலந்து கொண்டு புத்தக வெளியீட்டில் சிறப்பித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புத்தக எழுத்தாளர் ருக்குமணி சிவகுமார்
” தான் எழுதியுள்ள ராக களஞ்சியம் என்கிற புத்தகம் மூலமாக ராகங்களில் உள்ள சந்தேகங்களை அனைவரும் எளிதாக தெரிந்து கொள்ளும் விதமாக அனைத்து குறிப்புகளும் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறினார். இதில் இசை கலைஞர்கள், இசை ஆர்வலர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.