திண்டுக்கல்லில் முக்குலத்து தேவர் சமுதாய நலச் சங்கம் , வீரமங்கை வேலு நாச்சியார் சேனை சார்பில் வேலுநாச்சியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது
இதற்கு மாவட்ட தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார். வீரமங்கை வேலுநாச்சியார் சேனை செயலாளர் டாக்டர் ஜெய வனிதா மணி வரவேற்புரையாற்றினார்.இதில் வீரமங்கை வேலு நாச்சியார் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது
பின்னர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புக்,பென்சில் பாக்ஸ் வழங்கப்பட்டது. மேலும் முக்குலத்து தேவர் சமுதாய நலச் சங்கம்,வேலு நாச்சியார் சேனையினர் இணைந்து ரத்ததானம் செய்தனர்.
இந்நிகழ்வில் செயலாளர் அறிவு, பொருளாளர் ரமேஷ்,துணைத் தலைவர் பாஸ்கரன், ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் அன்பு தேவர்,பரமன், வழக்கறிஞர் மலைராஜன், கணேசன்,மாயாண்டி, இளங்கோ,மண்டல செயலாளர் கண்ணன், பொருளாளர் ராஜன், துணைத் தலைவர் தங்கப்பாண்டி, செந்தில்குமார், பகுதி செயலாளர் ஜெயக்குமார், வேலு நாச்சியார் சேனைத் தலைவர் உமா, பொருளாளர் மஞ்சுளா,துணைத் தலைவர் கோமதி, துணைச் செயலாளர் கயல்விழி,பிரேமா, மீனாட்சி,வக்கீல் மணிமேகலை, சத்யா, மாதவி, மலர்விழி, காஞ்சனா, மீனா,பிரியா, முத்துலட்சுமி குமரேசன்,மலர் மாயாண்டி, முத்துலட்சுமி பரமன், முத்தீஸ்வரி,வசந்தி பரமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.