ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் பாட்டாளி மக்கள் கட்சி பசுமைத் தாயகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னையில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் வழக்கில் குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பசுமைத்தாயகம் மாநிலத் தலைவர் சௌமியா அன்புமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்த ஆர்ப்பாட்டத்தில் சௌமியா அன்புமணியை கைது செய்ததை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் பாட்டாளி மக்கள் கட்சி பசுமை தாயகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது, பசுமை தாயகம் மாவட்ட செயலாளர்
கே.ஆர் கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் மாநில சமூக நீதிப் பேரவை துணைத் தலைவர் வழக்கறிஞர் மூர்த்தி முன்னிலையில் நடந்தது.
இதில் மாநில செயற்குழு உறுப்பினர் சிவானந்தம்,
இளைஞரணி மாவட்ட செயலாளர் ஹரிதாஸ்,
ஒன்றிய செயலாளர் சித்தார்த், அருண், ஒன்றிய தலைவர் வெங்கடேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கஜேந்திரன், நகரத் தலைவர் நாச்சியப்பன், மாவட்ட பொறுப்பாளர் சதீஷ், மாவட்டம் மாணவரணி மணி, பசுமைத்தாயகம் ஒன்றிய செயலாளர்கள் செல்வம், வேடி, காளிதாஸ், பசுமைத் தாயகம் நகர செயலாளர்கள் பிரபு, பாலாஜி, ஊராட்சி மன்ற தலைவர்கள் வெங்கடேஷ்,
சஞ்சீவ் காந்தி, பிரமுகர் சென்மூர்த்தி, அபிமன்யு, பாலு, செல்வம், சக்திவேல், மாது, கிருஷ்ணமூர்த்தி, சின்னத்தம்பி உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என ஆர்பாட்டத்தில் கண்டன கோசம் எழுப்பினர்.
அனுமதி பெறாத இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் உதவி காவலர்கள் காவலர்கள் கைது செய்து பேரூராட்சி திருமண மண்டபத்தில் அடைத்தனர்.