புதுக்கடை, டிச- 31
புதுக்கடை அருகே அரசமூடு பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் சஞ்சய் (18). இவர் கருங்கல் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் ஆவார். நேற்று 29-ம் தேதி தாயிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். தாயார் பணம் கொடுக்காததால் அறையில் சென்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.
இது தொடர்பாக தாய் நளினியின் புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் மாணவர் உடலை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்தனர்.


