திருப்பத்தூர்:டிச:29, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆளும் திமுக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட தலைவர் அருள்மொழிவர்மன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் தினேஷ், மாவட்ட செயலாளர் பாண்டியன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் புதிய பென்சன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்து மீண்டும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதியமாற்ற நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும், ஆளும் திமுக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட 11 அமச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், துணை தலைவர்கள் பிரேம்குமார், திருமால், பூவண்ணன், இணை செயலாளர் விஜயகுமார் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.