நாகர்கோவில் டிச 27
குமரி மாவட்டத்தில் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு தொடக்கவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி டிசம்பர் 26ம் தியதியுடன் நூற்றாண்டு தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் நூற்றாண்டு தொடக்கவிழாவும் தியாகசீலர் நல்லகண்ணு அவர்களின் நூறாவது வயது பிறந்தநாள் விழாவும் சிறப்பாக கொண்டாடபட்டது.. குமரிமாவட்டத்தில் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு தொடக்கவிழா குமரிமாவட்ட இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டசெயலாளர் தோழர் தா. சுபாஷ் சந்திரபோஸ் தலையில் டிசம்பர் 26 நேற்று அண்ணா விளையாட்டரங்கம் அருகில் உள்ள ஜீவா சிலை முன்பு நடைபெற்றது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் எஸ். அனில்குமார், ஜி. சுரேஷ்மேசிய தாஸ், மாவட்ட பொருளாளர் பி. தாமரைசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஜீவா சிலைக்கு முன்னாள் மாவட்டச்செயலாளர் தோழர் ற்றி. முருகன் சொக்கலிங்கம்,வி.அருள்குமார், தோழியர் சுந்தரவல்லி ஆகியோர் மாலை அணிவித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி கொடியை மாவட்ட குழு உறுப்பினர் தோழர் வி.அருணாசலம் கொடி ஏற்றி வைத்தார். தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில தலைவர் அஞ்சலி செலுத்தினார்.2025ம் ஆண்டுக்கான ஜனசக்தி காலண்டர், ஜனசக்தி சிறப்பிதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது.. மூத்த தோழர்களுக்கு மரியாதை செய்யபட்டது.நூற்றாண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு நாகர்கோயிலிருந்து களியக்காவிளை வரை வாகனபிரச்சாரமும் மக்கள் சந்திப்பு இயக்கமும் நடைபெற்றது. வாகனபிரச்சாரத்தை இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும் ஏ. ஐ. டி. யு. சி. மாநிலதலைவருமான தோழர் எஸ். காசி விஸ்வநாதன் துவக்கி வைத்தார். வெட்டுர்ணி மடம், பார்வதிபுரம், தக்கலை, இரணியல், திங்கள் சந்தை, குளச்சள், கருங்கல், மேல்புறம், அருமனை, மார்த்தாண்டம் குழித்துறை பகுதிகளில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது..மாலையில் களியக்காவிளையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் என். கோபாலகிருஷ்ணன் வாகன பிரச்சாரத்தைமுடித்து வைத்தார். ஆரல்வாய்மொழியில் மாலை மாநகரச்செயலாளர் வி. அருள்குமார் தலைமையில் நூற்றாண்டு போராட்டங்களும் தியாகங்களும் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது..