மதுரை டிசம்பர் 22,
மதுரையில் இரவு நேர விமான சேவை தொடக்கம்
மதுரையிலிருந்து சென்னைக்கு இரவு விமான சேவையாக இண்டிகோ நிறுவனம் சார்பில் துவங்கப்பட்டது. இதன் துவக்க விழா மதுரை விமான நிலையத்தில் நடைபெற்றது. மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார், பொது மேலாளர் ஜானகிராமன், மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆய்வாளர் இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் ஆனந்த், மோகனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கேக் வெட்டி கொண்டாடினார்கள். இண்டிகோ விமான இரவு சேவையின் தொடக்கமாக மதுரையிலிருந்து இரவு 43 பயணிகள் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.