டிச. 15
திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் மற்றும் திருப்பூர் மாநகராட்சி மேயர் ந. தினேஷ்குமார் தெற்கு மாநகர செயலாளர் டி .கே.டி.மு .நாகராஜ் , நான்காம் மண்டல ஆணையாளர் வினோத் , துணை மேயர் ரா.பாலசுப்ரமணியம்,மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கழக மகளிர் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மண்டலம்-4, கே.எம்.ஜி நகர் பகுதியில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி 2024-25ன் கீழ் ரூ.25.80 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் மற்றும் நியாய விலை கடை கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை பூமி பூஜையிட்டு துவக்கி வைத்தார்கள்.