By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்கள் சிந்தனை பேரவை சார்பில் பாரதி விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > மக்கள் சிந்தனை பேரவை சார்பில் பாரதி விழா
ஈரோடுமாவட்டம்

மக்கள் சிந்தனை பேரவை சார்பில் பாரதி விழா

Last updated: December 14, 2024 11:30 am
December 14, 2024
44 Views
Share
SHARE

ஈரோடு டிச 14 

மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் 27 ம் ஆண்டு பாரதி விழா  ஈரோடு கொங்கு கலையரங்கில் நடைபெற்றது.

நிகழ்வுக்கு தேசிய நல விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் எஸ்கேஎம். மயிலானந்தன் தலைமை வகித்தார். மக்கள் சிந்தனைப் பேரவையின் நிறுவனர் மற்றும் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்றார்.பாரதி ஜோதியை ஏற்றி வைத்து அணிவகுப்பைத் தொடக்கி வைத்த டாக்டர் என்.எஸ். சத்தியசுந்தரி வாழ்த்துரை வழங்கினார்.

மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டை முன்னிட்டு இந்நிகழ்வில் தவத்திரு அடிகளாரின் திருவுருவப் படம் திறந்து வைக்கப்பட்டது. சாகித்ய அகாடமி விருது பெற்ற

எழுத்தாளர் பொன்னீலன் அடிகளாரின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.

எழுத்தாளர் பொன்னீலன் எழுதிய ‘தமிழகத்தின் ஆன்மீக வழிகாட்டி ‘முனைவர் சொ. சேதுபதி தொகுத்த ‘மகாகவி பாரதி வரலாறு ‘பேராசிரியர்  மணிகண்டன் தொகுத்தும் பகுத்தும் வெளியிட்ட ‘பாரதியும் ஜப்பானும் ‘ ஆகிய மூன்று நூல்கள் மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

2024 ஆம் ஆண்டுக்கான மக்கள் சிந்தனைப் பேரவையின் பாரதி விருது ‘பாரதியியல் ஆய்வாளர் முனைவர் சேதுபதிக்கு வழங்கப்பட்டது. இவ்விருது கேடயம், தகுதிப் பட்டயம், ரூ 50,000 பரிசுத்தொகை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். பேரவையின் பணிக்குழு உறுப்பினர் பொன்னுசாமி விருதாளரின் தகுதிப்பட்டயம் வாசித்தார்.

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் விருதாளர் முனைவர்  சேதுபதிக்கு விருதை வழங்கி  சிறப்புரையாற்றினார். விருதாளர் முனைவர் சேதுபதி ஏற்புரை நிகழ்த்தினார். பேரவையின் மாநிலத் துணைத்தலைவர் பேராசிரியர்  விஜயராமலிங்கம் நன்றி கூறினார்.

முன்னதாக  பாரதியார் இறுதி பேருரையாற்றிய ஈரோடு கருங்கல்பாளையம் நூலகத்திலிருந்து பாரதி ஜோதியை ஏந்திய பேரவையின் மாணவர் படை அணிவகுப்பு தொடங்கியது. அங்கு பாரதி ஜோதியை ஏற்றுவித்து அணிவகுப்பைத் தொடங்கி வைத்தார் 91 வயது நிரம்பிய பவானி நதி பாதுகாப்புக் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் சத்தியசுந்தரி.

‘பாரதி ஜோதி ‘ அணிவகுப்பு இசை முழக்கத்துடன் கம்பீரமாக

புறப்பட்டு ஈரோடு நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து இறுதியாக பாரதி விழா நடைபெற்ற கொங்கு கலையரங்கம் வந்து சேர்ந்தது.

விருதாளர் முனைவர் சேதுபதி பாரதி ஜோதியைப் பெற்றுக்கொண்டு சிறிது தூரம் நடந்து அரங்கத்தின் உள்ளே வைக்கப்பட்டுள்ள மகாகவி பாரதி படத்தின் முன்பு ஜோதியை ஊன்றி வைத்தார். ஜோதி விழா முடியும் வரை சுடர்விட்டு எரிந்த வண்ணம் இருந்தது.

பாரதி விழா நிகழ்வில் பல வெளி மாவட்டங்களிலிருந்து மக்கள் சிந்தனைப் பேரவையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர்  பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
முத்தாரம்மன் கோயிலில்3011 சுமங்கலி பூஜைகள்
படப்பையில் நடைபெற்ற மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு பரப்புரைத் திட்டம்
6-ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கெஜல்நாயக்கன்ப்ட்டி பேருந்து நிலையம் அருகே கந்திலி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கொட்டும் மழையிலும் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தேனீக்கள் பராமரிப்பு தொழிலாளி மர்ம சாவு

November 20, 2024
32 Views
பல்கலைக்கழகத்தில் நூல் வெளியீட்டு விழா
பாரத பிரதமர் நரேந்திர மோடி 75வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
காண்டாமிருக வண்டு கட்டுப்பாடு செயல்முறை
பெரியகுளத்தில் எம்கேஎஸ் சட்ட அலுவலகம் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account