கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மதுவிலக்கு அமல்பிரிவில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்த 93 இருசக்கர வாகனங்கள் மற்றும் 54 நான்கு சக்கர வாகனங்கள் மொத்தம் 147 வாகனங்களை அரசணை எண். G.O.Ms.No.41/Prohibition and Excise (VIII) Department, Dated 21.08.2024 கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவு C:N. :88/SPCAMP -ன்படியும் வருகின்ற 17.12.2024ம் தேதியில் காலை 10.00 மணியளவில் ஒசூர் உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலக மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. மேலும் ஏலம் விடப்பட உள்ள வாகனங்கள் கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலக வளாகம் மற்றும் ஆயுதப்படை வளாகம் கிருஷ்ணகிரி மற்றும் ஒசூர் மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலக வளாகம் மற்றும் ஒசூர் உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகிய நான்கு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏலம் கோரும் நபர்கள் இன்று 10.12.2024-ம் தேதி முதல் மேற்படி நான்கு இடங்களில் வாகனங்களை பார்வையிடலாம். மேலும் ஏலம் கோரும் நபர்கள் முன்வைப்பு கட்டணத் தொகையாக இருசக்கர வாகனங்களுக்கு ரூ.1000/- (எழுத்தால் ஒராயிரம் மட்டும்) மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.5000/- (எழுத்தால் ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) செலுத்தவேண்டும். அதற்கான டோக்கன் (Token) 10.12.2024ம் தேதி முதல் ஒசூர் மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகத்தில் வழங்கப்படும். வாகனத்தின் விபரம் மற்றும் விலைப்பட்டியல் ஒசூர் மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகத்தில் ஏலம் கோருபவர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
1941/2
வாகனத்தின் உரிமையாளர்கள் உரிமையாளருக்கான பதிவு சான்று (RC Book) மற்றும் ஆதார் அட்டை கொண்டு வரவேண்டும். பொது ஏலத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் ஆதார் அட்டை அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை தவறாமல் கொண்டு வரவேண்டும். ஏலத்தில் கலந்துக்கொண்டு வாகனம் எடுக்காதவர்களுக்கு முனவைப்பு கட்டணத்தொகை ஏலத்தின் முடிவில் திருப்பி தரப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.