கன்னியாகுமரி,டிச.3-
நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி புதிய மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார் .
கன்னியாகுமரி தொகுதி மாவட்ட தலைவராக சாலோமன் தீபக் நியமிக்கப்பட்டார்.கன்னியாகுமரி அருகேயுள்ள சுவாமிநாதபுரம் இவரது சொந்த ஊர்.எம்.பி.ஏ.,மற்றும் மெரைன் இன்ஜினியரிங் படித்துள்ளார். பல்வேறு வெளிநாடுகளில் முக்கிய நிறுவனங்களின் தலைமை பதவிகளில் பணியாற்றுள்ளார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட மரிய ஜெனிபரின் கணவரான இவர்,
நாம் தமிழர் கட்சியில் 10 ஆண்டுகளாக அமீரக,வளைகுடா செயலாளராக பணியாற்றி வந்துள்ளார்.
தற்போது சாலேமன் தீபக் கன்னியாகுமரி தொகுதி மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட செயலாளராக மைக்கிள் எடில்பெர்ட், பொருளாளர் பன்னீர்செல்வம், செய்தி தொடர்பாளர் விஜேஷ் ஆகியோரும் புதிய நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.