பரமக்குடி டிச, 4 : ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை ஒன்றிய அரசு கொண்டு வருவதை கண்டித்து பரமக்குடியில் தாய் தமிழர் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் 91 பேர் கைது செய்யப்பட்டனர்.
பரமக்குடியில் தாய் தமிழர் கட்சியினர் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை ஒன்றிய அரசு கொண்டு வருவதை கண்டித்து அதனை நிராகரிக்க கோரி ரயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு கட்சியின் தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் செல்வம், மாநில அமைப்பு செயலாளர் சேது முனியசாமி, தலைமை நிலைய செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ச் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு ரயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு ரயில் மறியலில் ஈடுபட சென்றனர்.அப்போது,ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை நிராகரிக்க கோரி மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 91 பேரை கைது செய்தனர்.
படம்
பரமக்குடியில் ஒன்றிய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கொண்டு வருவதை கண்டித்து தாய் தமிழர் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.