நாகர்கோவில் நவ 29
கன்னியாகுமரி மாவட்ட அரசு ரப்பர் கழக தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி மற்றும் இஎஸ்ஐ மருத்துவ காப்பீடு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என். தளவாய்சுந்தரம் வலியுறுத்தியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கீரிப்பாறை முதல் குலசேகரம் வரை உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான 4785.70 ஹெக்டேர் இடத்தில் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் விதத்தில் வனத்துறை இடத்தில் ரப்பர் மரங்கள் நடவு செய்து ரப்பர் பால் மூலம் ஷிட் தயாரிக்க தேவையான பணிகள் கீரிப்பாறை, காளிகேசம், மைலார், குத்தி யார், பரளியார் ஆகிய பகுதிகளில் தொட ங்கப்பட்டுள்ளது. தற்போது 4187.68 ஹெக்டேர் அரசு ரப்பர் கழகத்தின் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதன் மூலம் கீரிப் பாறை அரசு ரப்பர் தொழிற்சாலையில் தினசரி மழை காலத்தில் 4 டன் முதல் வெயில் காலத்தில் 7 டன் வரையும் பால் வெட்டப்பட்டு தொழிற்சாலையில் பால் பதனிடப்பட்டு ஷிட் தயாரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அரசு ரப்பர் கழகம் கடந்த 2018ம் ஆண்டு பெய்த ஒக்கி புயலின் காரணமாகவும் வயது முதிர்ந்த மரங்களின் காரணமாகவும் ரப்பர் பால் வெட்டும் தொழிலில் கீரிப்பாறை கோட்டம் – 147 மணலோடை கோட்டம் – 89 கோதையார் கோட்டம் – 135 சிற்றார் கோட்டம் – 138 கீரிப்பாறை தொழிற்சாலை – 49 ஆக 558 நிரந்தர தொழிலாளர்களும் 298 தற்காலிக தொழிலாளர்கள் உட்பட 856 பேர்கள் பணி புரிந்து வருகின்றனர். மேற்படி தொழிலாளர்களுக்கு கீரிப்பாறை, பரளியார், மைலார், கோதையார் பகுதிகளில் 600 குடியிருப்புகளும் இருந்து வருகிறது.
இந்நிலையில் இங்கு பணிபுரிகின்ற தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு
தேவையான மருத்துவ உதவிகள் செய்ய கோட்டங்கள் தோறும் செவிலியர் சார்ந்த மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கீரிப்பாறை, பரளியார், கீரிப்பாறை தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு கீரிப்பாறை அரசு குடியிருப்பில் மருத்துவமனை உள்ளது. இரண்டு செவிலியர்களும், வெள்ளிகிழமை தோறும் காலை 10 மணி முதல் 11 மணிவரை தடிக்காரன்கோணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவர் ஒருவரும் வந்து செல்கிறார்.
மேலும் வேலை நேரத்தில் மருத்துவரை சந்திக்க தொழிலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும்,
கிரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிற்சாலையில் பணிபுரியும் 49 தொழிலாளர்கள் தங்களது பணியின் போது. அமோனியா, சல்பூரிக் ஆசிட் போன்றவைகளில் பணிபுரியும் போது ஏற்படும் தோல் சம்மந்தப்பட்ட நோய்க்கு ரப்பர் கழக மருத்துவமனையில் மருந்து கிடைக்காததினால் தனியார் மருத்துவமனை சிகிட்சை தேவைபடுவதால் அரசு ரப்பர் கழக தொழிலாளர்களை இ.எஸ்.ஐ காப்பீடு திட்டத்தில் இணைக்க வேண்டும்.
மேலும் மத்திய அரசின் இ.எஸ்.ஐ மருத்துவ காப்பீடு திட்டம் அரசு ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு மட்டும் நிர்வாக காரணங்களால் மறுக்கப்பட்டு வருவதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர் எனவே அரசு ரப்பர் தோட்ட நிர்வாகம்
அரசு ரப்பர் தோட்டத்தில் பணிபுரிகின்ற நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்களையும் இ.எஸ்.ஐ காப்பீடு -யில் உறுப்பினராக சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும் தொழிற்கூடத்தில் சமீபகாலமாக தொழிலாளர்கள் பணி செய்ய பற்றாகுறை ஏற்படுவதால் தற்போது பணியில் உள்ள தற்காலிக தொழிலாளர்களை மிரட்டி கூடுதல் பணி செய்ய நிர்வாகம் வலியுறுத்தி வருவதாகவும் இதனால் பணியில் ஈடுபடுகின்ற தொழிலாளர்கள் மிகவும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர் இதனை நிர்வாகம் உடனே கைவிட வேண்டும் தற்போது தொழிற்சாலையில் தற்காலிகமாக பணிபுரிகின்ற தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் தொழிலாளர்களுக்கு கடந்த 2 வருடமாக வழங்க வேண்டிய கள உபகரணங்களை உடனடியாக வழங்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும் தொழிலாளர்களுக்கு காப்பீடு திட்டம் அரசு ரப்பர் கழகம் வழங்காத காரணமாக தனியார் மருத்துவமனைகளில் சிகிட்சை பெற்று நிர்வாகத்திடம் சமர்பித்த மருத்துவ சான்றுகளுக்கு பணம் ஒதுக்கி பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்
தொழிற்சாலையில் ஆசிட் மற்றும் கெமிக்கலில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தகுந்த பணி பாதுகாப்பு மற்றும் நோய்களில் இருந்து விடுபட தகுந்த தனியார் மருத்துவமனையில் சிகிட்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என். தளவாய்சுந்தரம் வலியுறுத்தியுள்ளார்