தஞ்சாவூர். நவம். 25.
தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் 18, 19 வயது நிரம்பிய வர்களை விடுபடாமல் சேர்க்க வேண்டும் என மேற்பார்வையாளர் ஹரிஹரன் அறுவறுத்தினார்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் முன்னிலை வகித்தார் வாக்காளர் பட்டியல் மேற்பார்வை யாளரும், நில சீர்திருத்த ஆணையருமான ஹரிஹரன் தலைமை தாங்கி பேசியதாவது.
18முதல் 19 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் விடுபடாமல் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் .இறந்த மற்றும் இடம் பெயர்ந்த வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க உரிய நடவடிக்கை துரிதப் படுத்த வேண்டும். 100 சதவீத தூய வாக்காளர் பட்டியல் என்ற இலக்கினை அடைய அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளும் அலுவலர்களும் உதவ வேண்டும்.
இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்காத வர்கள் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்க வேண்டும் பிழைத்திருத்தம், கலர் புகைப்படம் இடம் பெறவும், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்யவும் விண்ணப்பிக்கலாம். வாக்குச் சாவடிக்கு சென்று உரிய படிவம் பெற்று பூர்த்தி செய்து வழங்க இயலாத 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள்www.nvsp.in என்ற இணைய தளம் மற்றும் மொபைல் ஆப் மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் கும்பகோணம் உதவி ஆட்சித் தலைவர் ஹிருதயா விஜயன் வருவாய் கோட்டாட்சியர்கள் இலக்கியா, ஜெயஸ்ரீ ,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)சரவணன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தஞ்சாவூர் சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களான தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கலைக்கல்லூரி மற்றும் மன்னர் அரசு சரபோஜி கலைக் கல்லூரியில் நடந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாமை வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் ஹரிஹரன், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.