நவ. 23
திருப்பூர் மாநகர பகுதிகளில் திட்டப் பணிகளை நிறைவேற்றித் தருமாறு திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார் திருப்பூர் மாநகர மாவட்ட தலைவர் ஆர் கிருஷ்ணன் மற்றும் மாநகர மாவட்ட நிர்வாகிகள்.
திருப்பூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள ராமமூர்த்தி அவர்களை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக மாவட்ட தலைவர் ஆர். கிருஷ்ணன் அவர்களும் 48 வது வார்டு மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி கோபால்சாமி அவர்களும் மாநகர நிர்வாகிகள் பாகனேரி ரவீந்திரன் மெடிக்கல் குமார், கோபாலகிருஷ்ணன், மற்றும் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து மாநகரப் பகுதியில் நிலவும் முக்கிய பிரச்சினைகளை உடனடியாக நிறைவேற்ற கோரியும்
48 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற கோரியும்
மோசமான தார் சாலைகளை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என்றும் புதிய தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என்றும் ராக்கியாபாளையம் நல்லூர் ஜே எஸ் கார்டன் பகுதிகளில் தேங்கியுள்ள சாக்கடை கழிவு நீர்அகற்ற சாக்கடை வசதி உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை மனு அளித்தனர்.
உடனடியாக ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய ஆணையாளர் உறுதியளித்துள்ளார்.



