நாகர்கோவில் நவ 15
கன்னியாகுமரி மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக 1 லட்சத்து 12 ஆயிரத்து 556 நபர்களுக்கு 363.28 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
கன்னியாகுமரியில் மாவட்ட 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலை .நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமை வகித்தார்.
கன்னியாகுமரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சிவகாமி வரவேற்றார், துணை பதிவாளர் பழனியம்மாள் கூட்டுறவு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளல் வாசித்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கியும் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் பயனாளிகளுக்கு அரசு நல திட்டஉதவிகள் வழங்கிய நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-
கன்னியாகுமரியில் 2000 ம் ஆண்டு கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை எழுப்பிய வெள்ளிவிழா ஆண்டு. வெள்ளி விழா காணும் வள்ளுவர் சிலை இயற்கை, மற்றும் சுனாமி தாக்குதலையும் தாங்கி நிற்கிறது காலத்தால் அழியாததும் வள்ளுவன் ஆற்றிய குறள் என்றாலும் திருவள்ளுவருக்கு கலைஞர் எழுப்பிய சிலை காலத்தின் சீற்றத்தையும் தாங்கி நிற்கும் வல்லமை கொண்டது என்பதை நமக்கு உணர்த்தியது ஐயன் திருவள்ளுவரின் சிலை. கூட்டுறவு வார விழா கொண்டாட கூடிய இந்த தருணத்தில் தமிழ்நாட்டின் சமூக பொருளாதார மேம்பாட்டில் கூட்டுறவின் பங்கு என்ற கருப்பொருளுடன் குமரி மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாட ப்பட உள்ளது. கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக விவசாயிகள் பெண்கள் ஏழை எளிய நலிவுற்ற மக்கள் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டவர்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடையும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது.அந்த வகையில் வேளாண்மை துறை ,ஊரக வளர்ச்சித்துறை, கைத்தறி துறை, காலநடை பராமரிப்புத் துறை, பால் வளத்துறை ,மீன்வளத்துறை, கதர் கிராமிய துறைகள், வீட்டுவசதிதுறை உள்ளிட்ட துறைகளின் மூலம் கூட்டுறவுத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தமட்டிலும் மொத்தம் 203 கூட்டுறவு சங்கங்கள் இன்றைக்கு மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது. தமிழ்நாட்டிலே இருக்கக்கூடிய பல்வேறு மாவட்டங்களை விட துடிப்பாக செயல்படக்கூடிய கூட்டுறவு சங்கங்களை கொண்டிருக்கக் கூடிய மாவட்டம் நம்முடைய குமரி மாவட்டம். இந்த கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு பயிர் கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன், மகளிர் சுய உதவிகளுக்கான கடன்,வீட்டு கடன், தானிய ஈட்டுக் கடன், மகளிருக்கான தொழில் முனைவோர் கடன், வாகன கடன் என பல்வேறு கடன்களை நாம் இன்றைக்கு வழங்கி இருக்கிறோம். அதன் அடிப்படையில் இதுவரை 3 லட்சத்து 57 ஆயிரத்து 962 பயனாளிகளுக்கு இதுவரை நம்முடைய கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கடன் உதவி வழங்கியிருக்கிறோம். தமிழக முதல்வர் தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு அரசால் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக 1 லட்சத்து 12 ஆயிரத்து 556 நபர்களுக்கு 363.28 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன மேலும் சட்டப்பேரவை 110 விதிப்படி கூற்றுத் துறை வாயிலாக ஒரு குடும்பத்திற்கு ஐந்து பவுனுக்கு உட்பட்ட நகை கடன்களை சில தகுதிகளின் கீழ் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்தார் அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 24 ஆயிரத்து 321 நபர்களுக்கு 105 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..
மேலும் 37, ஆயிரத்து 201 மகளிர் சுய உதவி குழுவினருக்கு 125.40 கோடி மதிப்பில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் 13 கூட்டுறவு மருந்தகங்கள் மூலமாக 20 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளாக டிராக்டர், நெல் அறுவடை இயந்திரம், நாற்று நடவு இயந்திரம், பவர் வீடர், பவர் டில்லர், ஆகிய எந்திரங்கள் கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக குறைந்த வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது.நம்முடைய தமிழ்நாட்டு உடைய இன்றைக்கு தமிழ்நாடு இந்தியாவினுடைய மிகப்பெரிய இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலம் என்று சொல்லக்கூடிய இடத்தில்நாம் இருந்து வருகிறோம். அதற்கு மிக மிக முக்கியமான காரணங்கள் இந்த கூட்டுறவு அமைப்புகள். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் தன்னுடைய பங்களிப்பை மிகச் சிறப்பான வகையிலே இங்கே அளித்திருக்கிறது. முதலமைச்சர் சுதந்திர தின சிறப்பு உரையில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைத்திட தமிழக முழுவதும் ஆயிரம் முதல்வர் மருந்தகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நம்முடைய மாவட்ட கலெக்டர் முயற்சியோடு 11 முதல்வர் மருந்தாக இன்றைக்கு அமைக்கக்கூடிய அளவுக்கு மிக வேகமாக பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது .
நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் குறிப்பாக ஏழை மக்கள் அனைவருக்கும் உணவுக்கு உத்தரவாதம் வழங்கல் மற்றும் அவர்களுக்கு தரமான அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் ஒவ்வொரு மாதமும் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது குமரி மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தில் மாவட்டத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 011 குடும்ப அட்டைதாரர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் வாயிலாகவும்,27 ஆயிரத்து 964 குடும்ப அட்டைதாரர்களுக்கு மீன்வளத்துறை வாயிலாகவும்,12,698 குடும்ப அட்டைதாரர்களுக்கு மகளிர் சுய உதவி குழுக்கள் வாயிலாகவும் ,3,092 குடும்ப அட்டைதாரர்களுக்கு பனை வெல்ல தொழில் வாரியம் வாயிலாகவும்,615 குடும்ப அட்டைதாரர்களுக்கு கதர் கிராம தொழில் வாரியம் வாயிலாகவும், என மொத்தம் 5 லட்சத்து 80 ஆயிரத்து 115 குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது பொது விநியோகத் திட்டப் பணிகள் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டு குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் செல்போனில் செயலி மூலம் பொது விநியோகத் திட்ட விபரங்களை பார்த்துக் கொள்ளும் வகையில் வெளிப்படை தன்மையுடன் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது.
முதல்முறையாக பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட காணியின மலைவாழ் மக்கள் பயன் பெறும்வகையில் கடந்த மாதம் 28 ம்தேதி நடமாடும் ரேஷன் கடை வாகனம் துவக்கி வைக்கப்பட்டது. இவ்வாறாக தமிழக அரசால் கூட்டுறவுத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் யாவும் விவசாயிகள், ஏழை, எளிய நடுத்தர, பிற்படுத்தப்பட்ட மக்கள் என அனைவருக்கும் சென்றடையும் வகையில் கூட்டுறவு சங்கங்கள் சிறப்பாக செயலாற்றி வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளுக்கான பேச்சுப்போட்டி, மற்றும் கட்டுரை போட்டி, துறை அலுவலர்கள், சங்கப் பணியாளர்களுக்கான பேச்சுப் போட்டி, மற்றும் கட்டுரை போட்டி, துறை அலுவலர்கள் சங்கப் பணியாளர்களின் குழந்தைகள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், துணை மேயர் மேரிபிரின்சிலதா,மனோதங்கராஜ் எம்எல்ஏ,மாவட்ட எஸ்பி சுந்தரவதனம், மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா,டிஆர்ஓ பாலசுப்பிரமணியம், ஆர்டிஓ காளீஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்புலட்சுமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக கூட்டுறவுசங்கங்களின் துணைப் பதிவாளர் முருகேசன் நன்றி கூறினார்.