மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் துறை இயக்குநர் வழிகாட்டுதலின் படி “போலீஸ் அக்கா” என்ற முன் மாதிரி திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் காவல் துணை ஆணையர் வடக்கு மற்றும் CWC கூடுதல் துணை ஆணையர் மற்றும் காவல் நிலையங்களில் பணி புரியும் 95 மகளிர் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மதுரை நகரில் உள்ள 185 பள்ளிகள் மற்றும் 25 கல்லூரிகளுக்கு மகளிர் காவல் தொடர்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் மாணவிகளுடன் வாரம் ஒரு முறை கலந்துரையாடி சொல்லும் உலவியல், பாலியல், போதைப் பொருட்கள், குடும்பம் மற்றும் சமூக ரீதியான பிரச்சனைகள் இருப்பின் அவற்றை கண்டறிந்து எவ்வாறு தீர்வு காண வேண்டும் என ஆலோசனைகள் வழங்கினார். மேலும் மாணவிகள் பகிரும் பிரச்சனைகள் மற்றும் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் காவல் ஆணையர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.



