தேனி மாவட்டம், மே – 5
தேனி மாவட்டம், உத்தமபாளையம் பட்டாளம்மன் மதுரை வீரன் காளியம்மன் கோவில் உற்சவ திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது முதல் நாள் நிகழ்வாக பொதுமக்கள் அதிகாலையில் முல்லை பெரியாற்றுக்கு சென்று பால்குடம் எடுத்து வந்தனர் சுவாமிகளை வழிபட்டனர் மக்கள் தங்களது நேர்த்திகடனை செலுத்தினர் தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கப்பட்டது அனைத்து சமுதாய மக்களும் அன்னதானத்தில் கலந்து கொண்டனர் விழாவின் நிரலாக சாமிகளின் சிலைகள் அலங்கரிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட முளைப்பாரி மேள தாளத்துடன் வெடி வெடுத்து ஊர்வலமாக கொண்டு சென்று முல்லைப் பெரியாற்றில் கரைத்தனர் இந் நிகழ்வுக்கு உத்தமபாளையம் அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்