வீரமா முனிவர் பிறந்த நாள் :-
காமநாயக்கன்பட்டியில் வீரமா முனிவர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ் வளர்த்த இத்தாலியப் பேரறிஞர் வீரமா முனிவர் 344வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு காமநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் க.மகாலட்சுமி, புனித பரலோக மாதா பசலிகா பங்குதந்தை அந்தோணி குரூஸ், காமநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் க.கலைச்செல்வி, மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பெருமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.