கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி, கயத்தாறு யூனியன் உள்பட்ட உசிலங்குளம் கிராமத்தில் மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து கட்டி முடிக்கப்பட்ட புதிய கலையரங்க கட்டிடத்தை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார், ஊர் நாட்டாமை, கோவில் தர்மகஸ்தா, முன்னாள் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் தலைமையில் உசிலங்குளம் திமுக கிளை செயலாளர் கருப்பசாமி முன்னிலை நடைபெற்றது. இந்நிகழ்வில் தெற்குஇலந்தகுளம் திமுக கிளை செயலாளர் ஆறுமுகம், திருமங்கலம் குறிச்சி திமுக பரமசிவம், சதீஷ்குமார், சாலைப்புதூர் வெயில் முத்து, கிராமத்துப் பெண்கள் இளைஞர்கள் மற்றும் ஏராளமானோர் பொது மக்கள் கலந்து கொண்டனர்


