போகலூர், நவ.5-
சோடா உப்பு என்னும் பேக்கிங் சோடாவின் பயன்களால் பல வலிகள் மற்றும் துர்நாற்றத்திலிருந்து எளிதாக தற்காத்து கொள்ளலாம் என்று சுகம் வைத்தியசாலை ஆயுர்வேத டாக்டர் காளிமுத்து கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
பொதுவாக
பஜ்ஜி,போண்டா,வடை ஆகியவற்றை மிருதுவாக்க பயன்படுத்த மட்டும் நாம் சமையறையில் சோடாப்பு வைத்திருப்போம்..அது எதற்க்காக பயன்படுத்துகின்றோம் என்று கூட நமக்கு சரியாக தெரியாது. ஆனால் அதன் மருத்துவ குணங்கள் மிக அதிகமாக உள்ளது.
நம்மில்
திடீரென கடுமையான வயிற்றுவலி ஏற்படுகிறதா? கவலை வேண்டாம் ஒரு டம்ளர் சுடுத்தண்ணீரில் ஒரு ஸ்பூன் சோடாப்பை போட்டு நன்றாக கலக்கி குடித்து விடுங்கள்…வயிற்றுவலி உடனே நின்று விடும்.
உடம்பில் ஏதேனும் முள் அல்லது கத்தி கீறி விட்டதா…சிறிது சோடாப்பை தண்ணீரில் கரைத்து தடவுங்கள்…கீரல் சரியாகிவிடும்..
தலையில் எண்ணெய் பிசுபிசுப்பு அதிகம் காணப்பட்டால் சிகைக்காயுடன் சிறிது சோடாப்பை சேர்த்து தேய்த்து குளித்தால் எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கி தலைமுடி பட்டு போன்று ஆகிவிடும்..குளித்த பிறகும் எண்ணெய் பிசுபிசுப்பு போகவில்லை என்றால் தலையில் எண்ணெய் தேய்க்கும்போது சிறிது சோடாப்பை சேர்த்து தேய்த்து தலை வாரவும். முடி பொலபொலவென ஆகிவிடும்.
வியர்வை அதிகரித்து சிலருக்கு துர்நாற்றம் ஏற்படும்..அதற்கு அவர்கள் தண்ணீரில் சிறிது சோடாப்பை கரைத்து அக்குளில் தேய்த்து வந்தால் வியர்வை அதிகம் வருவது கட்டுப்பட்டு துர்நாற்றமும் நீங்கிவிடும்.
சிலருக்கு பாதங்கள் அசிங்கமாக அழுக்காக இருப்பது போலவே தோன்றும்.. அவர்கள் சுடுத்தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சோடாப்பை சேர்த்து கரைத்து இரண்டு கால்களையும் நீரில் மூழ்குமாறு வைத்து பிரஷ் கொண்டு தேய்த்தால் கால் பளப்பளப்பாக மாறும். இதுபோல் சில வீடுகளில் உள்ள பொருட்கள் மருத்துவ குணங்கள் உள்ளன.
மேலும் விபரங்கள் பெற பட்டணம்காத்தான் இசிஆர் ரோட்டில் உள்ள சுகம் வைத்தியசாலையில் 94420 45435, 89400 04050 என்ற எண்ணில் முன் பதிவு செய்து நேரில் வந்து ஆலோசனை பெறலாம்,
இவ்வாறு அவர் கூறினார்.