மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்பாளுக்கு காப்பு கட்டுதல், சண்முகர் சன்னதியில் தெய்வானை மற்றும் வள்ளி சமேத சண்முகப் பெருமானுக்கு காப்பு கட்டுதல், கம்பத்தடி மண்டபத்தில் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல், உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு தினமும் அலங்காரம் செய்யப்படும். தினமும் மாலையில் உற்சவர சன்னதியில் இருந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை புறப்பட்டு கோவிலுக்குள் உள்ள திருவாச்சி மண்டபத்தில் 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். 6-ந் தேதி கம்பத்தடி மண்டப வளாகத்தில் கோவில் பணியாளர்கள் திருக்கண்ணில் வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சத்திய கிரீஸ்வார் முன்னிலையில் மாலையில் உற்சவர சன்னதியில் இருந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை புறப்பட்டு கோவிலுக்குள் உள்ள திருவாச்சி மண்டபத்தில் 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 6-ந் தேதி கம்பத்தடி மண்டப வளாகத்தில் கோவில் பணியாளர்கள் திருக்கண்ணில் வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சத்திய கிரீஸ்வரர் முன்னிலையில் முருகப் பெருமான் தனது தாயான கோவர்த்தனாம்பிகையிடம் இருந்து சக்திவேல் பெறுதல் நடைபெறும். 7-ந் தேதி மாலையில் சன்னதி தெருவில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். 8-ந்தேதி காலையில் தங்கமயில் வாகனத்துடன் சட்டத்தேரில் தெய்வானையுடன் முருகப்பெருமான் கிரிவலம் நடைபெறும். விரதம் இருந்த பக்தர்கள் சட்டத்தேரின் வடம் பிடித்து கிரிவலம் வந்து தரிசனம் செய்வார்கள். அன்று மாலை பாவாடை தரிசனம் மற்றும் கோவிலின் கருவறையில் முருகப்பெருமானுக்கு தங்க கவசம் அணிவித்தல் நடக்க இருக்கிறது என்பதை கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



