நாகர்கோவில் – அக் – 25,
ஆற்றூர் பேரூராட்சி கடந்தகொட்டி குளம் உடையும் நிலையிலுள்ள கரையை வலுப்படுத்தவும், அடைபட்டிருக்கும் மறுகால் சீரமைக்க கோரியும்,
ஆற்றூர் பேரூராட்சியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க கோரியும்,
தென்கரை ஊராட்சி கணக்குபிள்ளையார் குளம் ஆக்கிரமிப்பு அகற்றி தூர்வாரி கரைகள் வலுப்படுத்தி படித்தறை அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க கோரியும்,
கோதநல்லூர் பேரூராட்சி முட்டைக்காடு மாம்பறகுளம் தூர்வாரி கரைகள் வலுப்படுத்தி படித்தறை அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க கோரியும்,
நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட உழவர் பாசறை பொறுப்பாளர் சேம்ராஜ் அவர்கள் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் சீலன், தலைவர் சத்தியதாஸ், மண்டல தொழிற்சங்க பொருளாளர் அனீஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
கிழக்கு தொகுதி உழவர் பாசறை செயலாளர் ஜெகன், மத்திய தொகுதி செயலாளர் விஜூ, துணை தலைவர் இரத்தினராஜ், ஆகியோர் கலந்துகொண்டனர்.