மயிலாடுதுறை ரயில் அடியில் உள்ள ஸ்ரீ ஆபத்து தாரண ஆஞ்சநேயர் ஆலயத்தில் பகாசுரன் அந்தகன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த நடிகரும், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தருமான ஜெயம் எஸ்.கே கோபி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது கூறுகையில் முழுநேர அரசியல்வாதியாக இருந்த நான் அரசியலை விட்டு முழுமையாக விலகி முருகப்பெருமான் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன். தமிழ்நாட்டில் ஒருவேளை விளக்கு கூட ஏற்ற முடியாத பல கோயில்கள் உள்ளன. திருச்சி கிள்ளிக்காட்டில் சமீபத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகர் கோயில் பழுதடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோல மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சேதம் அடைந்த நிலையில் உள்ள முருகன், சிவன் மற்றும் பெருமாள் கோயில்களை இந்து சமய அறநிலையத்துறை தானாக முன்வந்து புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். அதற்கான முதல் விதையை இந்து சமய அறநிலையத்துறை போட்டால் அடுத்தடுத்து திருப்பணிக்கு பொதுமக்கள் முன்வருவார்கள். திருவிடைக்கழி முருகன் கோவிலை அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித் தந்து ஆன்மீக சுற்றுலா நகரமாக மாற்ற வேண்டும் என்றார்.



